Sunday, June 12, 2011

கையெழுத்து


அன்றொரு நாள் அம்மா கேட்டாள்
என்ன இது கையெழுத்து, கோழிக் கிறுக்கல் !
இன்னொரு நாள் நண்பன் கேட்டான்
என்ன இது கையெழுத்து, Calligraphy a?
கோழிக் கிறுக்கல் Calligraphy ஆன கதை
உங்களுக்குத் தெரியுமா?

Tuesday, May 31, 2011

மறுபடியும் அவள் பெயர் !


அனிச்சைச் செயலாய்
அம்மாவைத் தவிர
அடிக்கடி ஜெபிக்கிறேன்
அவள் பெயர் மட்டும் !

Wednesday, May 11, 2011

கவிதை



நிலா, வானம், காற்று, மழை புதிதாய் வேண்டும்
தண்ணீரில் நிற்கும்போதே வேர்வையும், தாகமும் வரும்
மழை சுடும், நிலவு சுடும்
என்று யோசித்து யோசித்து எழுதினாலும்
அது எங்கேயோ கேட்ட குரல் !
ஆயிரத்தோராவது முறை எழுதும் போதும்
முதல்முறை போல் இனிக்கும் ஒரேயொரு கவிதை
அவள் பெயர் !

Saturday, August 28, 2010

பெருந்தன்மை

ஒருவர் எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ, அப்பொழுது அவர் அப்படி நடந்து கொள்வதில்லை ! 

எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகின்றாரோ அப்பொழுதுதான் அப்படி நடந்து கொள்கிறார் !

Friday, August 27, 2010

தோல்வி !

எது நம்மை அதிகம் வருத்தும்?

நம்முடைய தோல்வியா?
நமக்கு முன்மாதிரி என்று நாம் நினைப்பவரின் தோல்வியா?

இரண்டாவதே!

Thursday, May 27, 2010

அவள்

அவளுக்கு எனவொன்றை
ஆசையாய் வாங்குகையில்
இதயத்தில் எங்கும்
ஈடில்லா உற்சாகம் !

உயிரின்றி இயங்காத
ஊன்போல் நானவளின்றி !
எனக்கான செல்வமாய்
ஏழிசையில் மெல்லிசையாய்

ஐந்திணையில் சிந்தனையாய்
ஒருத்தியவள் போதுமென்று
ஓர்நாள் கூறுகையில்
ஒளவியம்தான் கொண்டாள் அவளுடைய தோழி !

Sunday, May 23, 2010

காதல்

தெய்வீகமானது, புனிதமானது என்று 
விளக்க முயற்சித்த அதிமேதாவிகளைச் சாதாரணமாகத் தோற்கடித்திருக்கிறது !
விளக்கவே முடியாது என்று சொல்பவர்களையும் சேர்த்தே !
அதை விளக்க ஒரு வரியில்லை, ஒரு வார்த்தை கூட மிகையே !