ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரண்டு சொல்கிறேன் இப்போதே !
மீண்டும் உன் மடி சாய்ந்து உறங்க
மீண்டும் நீ சமைத்ததை ஒரு நாளைக்கு நான்கு முறை உண்ண
மீண்டும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேச
மீண்டும் நீ என் முதுகில் தட்டித் தூங்க வைக்க
ஒரு நாளாயினும் நான் உனக்குச் சமைக்க
ஒரு ஞாயிறேனும் உனக்கு முன் நான் உன்னை அழைக்க
ஒரு மாதமாயினும் உனக்கு ஓய்வு கொடுக்க
ஒரு வருடமாயினும் உன் பிறந்த நாளை மறக்காமல் இருக்க
உன்னுடன் ஒரே வீட்டில் வாழ
ஒரு முறையேனும் உனைக் காத்திருக்கவிடாமல் வீடு வர
என் மகளை நீ வளர்க்க
நீ அவள் வடிவில் நான் இறந்த பின்னும் இருக்க
ஆம் அம்மா, இதுபோல் எனக்கு இன்னும் ஆயிரம் ஆசைகள் உண்டு !
Subscribe to:
Post Comments (Atom)
Nice :)
ReplyDeletetill last line i dono that u r talking about mom......good one
ReplyDelete@Amar, thanks :-)
ReplyDelete@karthika, ஒரு ஞாயிறேனும் உனக்கு முன் நான் உன்னை அழைக்க should have given a hint, didnt it?